Our Feeds


Saturday, November 27, 2021

ShortNews

மக்கள் விரும்பாத பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் - ஜனாதிபதி கோட்டா



உலகளாவிய பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு நாட்டை சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கு எதிர்காலத்தில் மக்கள் விரும்பாத பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


விமர்சனங்கள் இருந்த போதிலும் எதிர்வரும் காலங்களில் நாடும் மக்களும் இதன் பலனை அனுபவிப்பார்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.


குறுகிய கால நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டவுடன் பொருளாதார நிவாரணம் கிடைக்கும் என தெரிவித்த ஜனாதிபதி நாட்டுக்காக அனைவரும் புரிந்துணர்வுடன் சிந்தித்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »