Our Feeds


Saturday, November 6, 2021

SHAHNI RAMEES

வழமைக்கு திரும்பிய பசறை-நமுனுகுல பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கை

 

பதுளை மாவட்டத்தில் நிலவுகின்ற மழையுன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக நமுனுகுல பன்னிரண்டாம் கட்டையை அண்மித்த பகுதியில் பாரியளவு கற்பாறைகள், மண்மேடு, மரங்கள் ஆகியன சரிந்து விழுந்தமையால் நேற்று முன்தினம் (03) முதல் முற்றாக போக்குவரத்து தடைப்பட்டது.

தொடர்ந்து இப்பாதையில் கற்பாறைகள் வீதியில் சரியும் அனர்த்த நிலைமை காரணமாக இப்பாதையூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள், பொதுமக்களின் கடும்முயற்சியால் கற்கள் தகர்க்கப்பட்டு வீதியோரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.00 மணி முதல் பாதையின் போக்குவரத்து நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டது.

இருப்பினும் தொடர்ச்சியாக இப்பாதையில் அனர்த்த நிலைமை பசறை-நமுனுகுல ஊடாக எல்ல பண்டாரவளை செல்லும் பிரதான பாதையில் தடைப்பட்ட வாகன போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

பதுளை மாவட்டத்தில் நிலவுகின்ற மழையுன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக நமுனுகுல பன்னிரண்டாம் கட்டையை அண்மித்த பகுதியில் பாரியளவு கற்பாறைகள், மண்மேடு, மரங்கள் ஆகியன சரிந்து விழுந்தமையால் நேற்று முன்தினம் (03) முதல் முற்றாக போக்குவரத்து தடைப்பட்டது.

தொடர்ந்து இப்பாதையில் கற்பாறைகள் வீதியில் சரியும் அனர்த்த நிலைமை காரணமாக இப்பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள், பொதுமக்களின் கடும்முயற்சியால் கற்கள் தகர்க்கப்பட்டு வீதியோரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.00 மணி முதல் பாதை மூடப்பட்ட பாதை திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக இப்பாதையில் அனர்த்த நிலைமை காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு போக்குவரத்து பொலிஸாரால் அறிவுறுத்தியுள்ளனர்.

நடராஜா மலர்வேந்தன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »