ரஞ்சன் குற்றவாளி இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவரை தண்டித்தது போதும் என்றும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
அந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ரஞ்சன் ராமநாயக்க பிரபல்யமான நடிகா். அரசியல்வாதி. அவர் அச்சமின்றி பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் குற்றவாளியல்ல.
நிலவும் தீய முறை அவருக்கு எதிராக அநீதி இழைத்துள்ளது. தற்போது அவர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றாா். அவரை தண்டித்தது போதும். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளாா்.