நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி நாளை காலை 6 மணிவரை மீண்டும் மூடப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.