புலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொது தராதர சாதரான தரப் பரீட்சை, கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பவற்றுக்கான பரீட்சை வினாத்தாள்களை அமைக்கும் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளா் எல்.எம்.டீ தர்மதாச தெரிவித்துள்ளாா்.
இது தொர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.