Our Feeds


Wednesday, January 26, 2022

ShortNews

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞர் திருமணத்திற்கு முதல் நாள் கைது



15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயேகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 19 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


மற்றுமொரு யுவதியை  இன்று (26) திருமணம் செய்யவிருந்த நிலையில், சிறுமியின் உறவினர் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று (25) குறித்த இளைஞன், மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் முச்சக்கர வண்டி பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், சந்தேக நபரின் வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் சிறுமியை கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் வீட்டுக்கு அழைத்து பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த இளைஞன் மற்றுமொரு யுவதியை திருமணம் செய்யவுள்ளமை தெரியவந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்ப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »