Our Feeds


Wednesday, January 12, 2022

ShortNews

71 கண்ணிவெடிகள்: 38 வெடிப்பொருட்கள்: மோப்ப சக்தியால் கண்டுபிடித்த எலி உயிரிழப்பு

 

கம்போடியாவில் நில கண்ணிவெடிகளை தனது மோப்ப சக்தியால் கண்டுபிடித்து வந்த எலி உயிரிழந்தது.

தாண்சானியாவில் பிறந்த ஆபிரிக்க வகை எலியான “மெகாவா”விற்கு கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டு, கம்போடியா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுவரை 71 கண்ணிவெடிகளையும், 38 வெடிப்பொருட்களையும் தனது மோப்ப சக்தியால் கண்டறிந்த மெகாவா கடந்த 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றது.

இந்த நிலையில், 8 வயதான மெகாவா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அதை பராமரித்து வந்த தன்னார்வல மையம் கூறியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »