Our Feeds


Saturday, January 29, 2022

ShortNews

ஆபிரிக்காவின் பாரிய வெள்ளத்தில் மூன்று நாடுகளில் 77 பேர் பலி



அனா புயலை தொடர்ந்து பெய்த அடைமழையால் பெருவெள்ளம் நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மூன்று ஆபிரிக்க நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.


மடகஸ்கர் மொசாம்பிக் மலாவி ஆகிய நாடுகளில் 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று நாடுகளையும் அனா என்ற புயல் தாக்கியது. அதனைத்தொடர்ந்து அந்த நாடுகளில் அடைமழை பெய்துவருகிறது.

தீவு நாடான மடகஸ்கரில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இருப்பிடங்களில் வசித்து வருகின்றனர்.

மலாவி நாட்டில் புயல்இ மழை வெள்ளத்தால் 11 பேர் இறந்தனர். அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் பேரழிவு நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் இன்றி புயலின் தாக்கத்தால் மலாவி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல் மொசாம்பிக்கில் அனா புயலால் 18 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்இ மேலும் வெள்ளத்தில் சிக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள்இ பள்ளிக்கூடங்கள்இ வைத்தியசாலைகள் ஆகியவை இடிந்து தரைமட்டமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »