Our Feeds


Thursday, January 6, 2022

SHAHNI RAMEES

விவசாயம் இல்லாத டுபாய், சிங்கப்பூரில் மக்கள் பட்டினி கிடப்பதில்லை- அமைச்சர் மஹிந்தானந்த

 

உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால், உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் எங்கிருந்து உணவு கிடைக்கிறதோ அங்கிருந்தே பெற்றுக்கொள்வதாக விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனப் பலரும் கருத்து வெளியிடுவதாகத் தெரிவித்த அமைச்சர், டுபாய், சிங்கப்பூர் நெல் பயிரிடாத போதிலும் அந்த நாட்டு மக்கள் பட்டினி கிடப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் ஒவ்வொரு நாடும் உணவு கிடைக்கும் இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »