Our Feeds


Sunday, January 9, 2022

SHAHNI RAMEES

சீனாவிலிருந்து மீண்டும் உரத்தை கொண்டு வருவது தொடர்பில் நாளை கலந்துரையாடல்

 

சீனாவிலிருந்து உரத்தை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை உரச் செயலகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் அறிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமையக் குறித்த உரம் நாட்டுக்குக் கொண்டு வரப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் சீன உரத்தை ஏற்றிய கப்பலை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த கப்பலில் 8,000 மெற்றிக் டன் உரம் கொண்டு வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »