வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறை தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்கள் அவசியம் 50,000 அமெரிக்க டொலர் காப்புறுதியை பெற்றிருக்க வேண்டும்.
அவர்கள் இலங்கையில் நோய்வாய்படும் பொழுது இந்த காப்புறுதி பெரும் உதவியாக அமையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)