இதுவரை வீட்டுக்கடன் பெறாத கிராமவாசிகள் சிலருக்கு நிலுவையில் உள்ள கடன் தவணையை செலுத்துமாறு வீட்டமைப்பு அதிகார சபையினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பிங்கிரியவில் பதிவாகியுள்ளது.
பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வீரபொகுன, தலம்பொல கிராமத்தை சேர்ந்த 6 குடும்பத்திற்கு குருநாகல் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து இவ்வாறு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிராமத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு பெற்ற கடனை திருப்பி செலுத்த வேண்டும் என உரிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், கடன் பெறும் நோக்குடன் பதிவுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்திருந்த போதும் இதுவரை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து கடன் பெறவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.