Our Feeds


Thursday, January 6, 2022

SHAHNI RAMEES

சிங்களவர்கள் மட்டும் அதிகாரத்திலும் நிர்வாகத்திலும் இருக்கவேண்டும் என்று நாங்கள் நம்பவில்லை - JVP





*வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயார்

*மக்கள் வீதிகளுக்கு   இறங்கியதன் மூலம்  ஊழல் மற்றும் பேரழிவு கரமான ஆட்சிகள் எவ்வாறு கவிழ்க்கப்பட்டன என்பதை நாங்கள் பார்த்துள் ளோம்

*யுத்தத்தின் போது சாதாரண தமிழ் மக்கள் எதிர்நோக்கிய  நெருக்கடிகள்  குறித்து நாம் இன்னும் தீவிரமாக சிந்தித்திருக்க வேண்டும்.

*குறுகிய கால திட்டங்களாக டொ லர் சம்பாதிப்பதை உறுதி செய்யக்கூடிய முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டிய  தேவை  உள்ளது

*பொதுவான நிகழ்ச்சி நிரலைப் பற்றிக்கூட  நாம் பேசக்கூடாது என்று நினைக்கிறேன்

*ஆட்சி மாற்றத்தைப் பொறுத்தமட்டில் எங்களின் முதல் விருப்பம் தேர்தல்தான்

*நாங்கள் மக்களின் உணர்வு மற்றும் நக ர்வுகளை  புரிந்துகொள்ளும் அரசியல் அமைப்பாக இருக்கிறோம்

//////////////////
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களுடன், குறிப்பாக கோவிட் 19 தொற்றுநோய் பரவியதில் இருந்து, ஜனதா விமுக்தி பெரமுன வின் [ ஜே . வி . பி  ]பரந்த ளவிலான கூட்டணியான ஜாதிக ஜன பலவேகய அல்லது தேசிய மக்கள் சக்தி சமூகத்தின் சகல பிரிவினரிடையேயும் அதன் பிரபல் ய த்தை ஈர்க்கக்கூடிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. . இரண்டு பாரம்பரிய அரசியல் முகாம்கள் மீது நம்பிக்கையில்லாமல், குறிப்பாக இரு ஆட்சிகளிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் வருவதால்தேசிய மக்கள்சக்தி   தனது ஆட்சியில் மட்டுமே நாட்டில் உண்மையானதும்  முற்போக்கான துமான மாற்றம் சாத்தியப்படும்  என்று கூறுகிறது. இத்தகைய  பின்னணியில் தேசியமக்கள்சக்தியின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநு ரகுமார திஸாநாயக்க 

டெய்லி மிரர் பத்திரிகைக்கு பேட்டியொன்றை அளித்திருக்கிறார்  பேட்டி வருமாறு ;

கேள்வி: அண்மையில் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் நீங்கள் ராஜபக்சக்களிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றத் தயார் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆனால், நாடு மிக மோசமான சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரரீதியில் வீழ்ச்சியை  சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நாட்டை மீண்டும் தடத்தில்  கொண்டு வருவதற்கான திட்டம் உங்களிடம் உள்ளதா?
பதில்;இந்த இரண்டு பாரம்பரிய கட்சிகளும் இந்த நாட்டை மிகவும் அழிவுகரமான முடிவுக்கு கொண்டு சென்றுள்ளன. இந்த நாட்டை மாற்றுவதற்கு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டிய அவசரத் தேவை உள்ளது. இந்த புதிய மாற்றத்திற்கு தலைமை தாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்முன்னைய  மற்றும் தற்போதைய ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில், அந்தந்தவிடயதானங்களில்  மிகவும் தகுதியான மற்றும் அதிக தகுதி வாய்ந்த ஆட்களை க் கொண்ட ஒரு அமைச்சரவையை எம்மால்  நியமிக்க முடியும். அதற்கான தகுதியானவர்கள்  எங்களிடம் உள்ளனர். அத்துடன் சட்டவிரோத மதுபான வியாபாரம், சட்டவிரோத மணல் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய பாராளுமன்றத்திற்கு பதிலாக மக்களுக்கு சேவை செய்யும் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவை நாம் நியமிக்க முடியும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பு அல்ல. அதற்கான திட்டங்களைத் தயாரித்து, இலக்குகளை அடைவதற்குத் தலைமைத்துவம் கொடுக்க வேண்டும், அதற்காக சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஈடுபட வேண்டும். எனவே இது இந்தவொரு  ஆளின்  அல்லது அந்தவொரு ஆளின்  கருத்தாக இருக்கப் போவதில்லை, ஆனால் ஒரு கூட்டு முயற்சி தேவை, ந்த கூட்டு முயற்சிக்குத் தயாராவதற்கான நடவடிக்கைக ளில்  நாங்கள்ஈடுபட்டுள்ளோம்

 கேள்வி ; இப்போது ள்ள முக்கிய  பிரச்சினை பொருளாதாரமாகும் .. கடனில் சிக்கியுள்ளஇந்த பொருளாதார சூழ்நிலையிலிருந்து எவ்வாறு நாட்டை மீட்டெடுக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்;இந்த நிலைமை குறித்து பல தசாப்தங்களுக்கு முன்னரே எச்சரிக்கைகளை விடுத்து வந்தோம் என்பதை ஆரம்பத்திலேயே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மக்களின்ய தார்த்தங்களோடுஇசைந்து போகாத இந்த பொருளாதாரப் பயணம், பெரும் கொன் கிரீட் காடுகளை உருவாக்க கடன் வாங்கி, அந்த பணத்தில் வீண் விரயமும், ஊழலும் நடந்ததால்ஏற்பட்டது . நாங்கள் பலமுறை எச்சரித்த போதிலும் பாரிய கடன் வலையில் சிக்கியுள்ளோம். இந்த சூழ்நிலையில் இருந்து வெளியேறுவதற்கு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டம் தேவை, மேலும் இந்த பொருளாதார சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க ஒரு தொலைநோக்கு பார்வையும் தேவை. பொருளாதார நிலையைத் தக்கவைக்க நீண்ட காலத் திட்டம் தேவை.
குறுகிய கால மட்டத்தில்  இந்தக் கடன்களில் இருந்து நாம் ஆரம்பித்த  திட்டம் குறித்து விரிவான கணக்காய்வு விசாரணையை மேற்கொள்ள வேண்டும், மேலும் இந்தக் கடன்களை வழங்கிய நிறுவனங்களுடன் பேச வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும். இரண்டாவதாக இன்றும் நாட்டிற்கு அதிகளவு  வெளிநாட்டு வருமானத்தை அதாவது சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டொ லர்களை ஈட்டிக்கொடுக்கும் பிரிவினராக வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள்உள்ளனர் . ஆனால் கடந்த ஜூன் மாதத்திலிருந்து சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொ லர்கள் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது  நாட்டுக்கு கிடைக்கக் கூடிய வெளிநாட்டு வருமானத்தைக் கூட இந்த தலைவர்கள் பெற்றுக் கொள்ளத் தவறியுள்ளனர். எனவே தற்போதுள்ள வெளிநாட்டு வருமான வழிகளை தக்கவைத்து அதனை அதிகரிக்க புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். உலகெங்கிலும் பெருமளவிலான செல்வந்த  இலங்கையர்கள் உள்ளனர், அவர்களை இந்த நாட்டில் முதலீடு செய்து இந்த நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளில் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். நாம் தற்போது இருக்கும் நெருக்கடியிலிருந்து ஒரே நாளில்  வெளியேற முடியும் என்று நான் கூறவில்லை. ஆனால் குறைந்தபட்சம் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்காவது  வருமானத்தை  ஈட்ட முடியும்.
மூன்றாவதாக, நாம் மூன்றாவது தரப்பினருக்குச் செல்கிறோம் என்றால், இது இப்போது மிகவும் பிரபலமான பதில், இந்த மூன்றாம் தரப்பினரால் நாட்டிற்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் எவ்வளவு உகந்ததாக இருக்கும் என்பதைப் பொறுத்து அது செய்யப்பட வேண்டும். ஒரு பிரபல்யமான தெரிவாக , இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற மூன்றாம் தரப்பினரிடம் செல்வதற்கு  நாங்கள் திட்டமிடவில்லை
ஒரு இடைக்காலத் திட்டமாக, கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற முதலீட்டு நடைமுறையை மீளக் கட்டமைக்க வேண்டும்.  சமீபத்திய முதலீடுகளை எடுத்துக் கொண்டால், சுமார் 35 சதவீதம்வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் அபிவிருத்திக்கானதாக  இருந்தது. குறுகிய கால திட்டங்களாக டொ லர் சம்பாதிப்பதை உறுதி செய்யக்கூடிய முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். எ மது பாரம்பரிய பயிர்கள்மூலம்  உலக சந்தையில் வருமானத்தை ஈட்ட முடியும் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம். இரண்டாவதாக, உலகின் மென்பொருள் சந்தையில் ஒரு பகுதியைப் பெறுவதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. சந்தையில் குறைந்தபட்சம் 15 பில்லியன் அமெரிக்க டொ லர்களையாவதுபெற்று க்  முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எ மது நாட்டின் புவியியல் அமைப்பு, மனித வளம், நாகரிகம், உலக அரசியல் உள்ளிட்ட வளங்களைக் கருத்தில் கொண்டு நீண்டகாலப் பொருளாதாரத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். இதை ஒரேநாளில்  செய்ய முடியும் என்று நான் கூறவில்லை, ஆனால் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு வருடங்கள் வரை ஒரு திட்டத்தில் வேலை செய்ய முடிந்தால், இந்த ஆழமான நெருக்கடியிலிருந்து எமது நாட்டைக் காப்பாற்ற முடியும்.


 கேள்வி: நீங்கள் அதிகாரத்தைக்பொறுப்பேற்பது பற்றிப் பேசினாலும்,  யதார்த்தத்தின் அடிப்படையில் அது ஜனநாயக ரீதியாக இடம்பெற  முடியாது. இந்த அரசாங்கம் இரண்டு வருடங்களை மட்டுமே நிறைவு செய்துள்ளது  அதற்கு இன்னும் மூன்று வருடங்கள் உள்ளன. கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் தற்போதைய அரசுக்கு நீங்கள் ஆதரவளிப்பது, குறைந்தபட்சம் அதன் பதவிக்காலம் முடியும் வரையாவது பரிந்துரைக்கக்கூடிய விடயம் அல்லவா ?

பதில்;இந்தத் தலைவர்களுக்கு நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? கோவிட்-19 என்பது மரண பயத்தை அனைவரின் வீட்டு வாசலுக்கும் கொண்டு வந்த ஒரு பேரழிவாகும். இந்த தலைவர்கள் அந்த தொற்றுநோய் பேரழிவிலிருந்து கூட கொள்ளையடித்தனர். உர நெருக்கடி விவசாயிகளை நேரடியாகப் பாதித்தது. உர இறக்குமதியைக் கூட கொள்ளையடித்தனர். அவர்கள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென விரும்புகிறார்களென் று  நினைக்கிறீர்களா? இன்று ஒரு அமைச்சர் தன் ஆசனத்தில்  தனக்காக சம்பாதிக்கும் திட்டத்துடன் அமர்ந்திருக்கிறார். அவருக்கு இந்த நாட்டைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ எந்த யோசனையும் இல்லை. எனவே நாம் ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலைப் பற்றி பேசக்கூடாது என்று நினைக்கிறேன். கோவிட் 19 தொற்றுநோய் பரவியபோது நாங்கள் அரசாங்கத்துடன் பேசினோம். இது அரசாங்கத்தின் தொற்றுநோய் அல்ல. இது ஒரு இயற்கைப் பேரிடர், அதிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முழுப் பங்களிப்பை வழங்கத் தயாராக இருந்தோம். நாங்கள் ஒரு பொதுவான பொறிமுறையை முன்மொழிந்தோம். ஆனால் ஆட்சியாளர்கள் அதைச் செய்யவில்லை, ஏனென்றால் ஒரு பொதுவான பொறிமுறைக்குள் அவர்களால் அன் டிஜென் சோதனைகளில் இருந்து கொள்ளையடிக்க முடியாது, வெளிநாட்டிலிருந்து இலங்கையர்களை வரவழைக்க அல்லது தேவையான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க முடியாது. எனவே இந்த தலைவர்களுடன் பொதுவான பொறிமுறை பற்றி பேசுவதில் எந்த பயனும் இல்லை.

கேள்வி ;. ஆனால்  இந்த நாட்டைகோத்தாபய ராஜபக்ச  வழிநடத்த்துவதற்கு  இன்னும் மூன்று வருடங்கள் இருக்கின்றதுஅல்லவா ?

பதில்;ஆட்சி மாற்றத்தைப் பொறுத்தமட்டில் எங்களின் முதல் விருப்பம் தேர்தல்தான். ஆனால் இந்த ஊழல் மற்றும் பேரழிவு ஆட்சிகளை எவ்வாறு  மக்கள்   வீதிகளுக்கு  இறங்கி வீழ்த்தினார்கள்  என்பதை உலகில் நாம் பார்த்திருக்கிறோம். அதுவும் ஜனநாயகம்தான். அது எங்கள் திட்டம் இல்லையென்றாலும் நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சிகள் தேர்தல்களால் மட்டுமல்ல, வீதிக்கு வந்த மக்களாலும் வீழ்த்தப்பட்டுள்ளன. உலகில் சமீபகால வரலாற்றில் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அதனால் இன்னும் மூன்று வருடங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
 கேள்வி ;வீதிப்  போராட்டங்கள்  மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவிற்குஇலங்கையர்கள் செல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்;நாங்கள் மக்களின் உணர்வு மற்றும் நகர்வுகளை புரிந்துகொள்ளும் அரசியல் அமைப்பாக இருக்கிறோம். மக்கள் சிலைகள் போல நிலையானவர்கள் அல்ல. அநீதிக்கு எதிராகப் பேசுவதும் சமத்துவமின்மைக்கு எதிராக வரிசையில் நிற்பதும்தான் யதார்த்தம். இது ஒரு இயற்கை நிகழ்வு. மனித இயல்பின் இயக்கத்தை நீங்கள் ஆய்வு செய்தால், இது ஒரு இயற்கையான தன்மை


கேள்வி ;அத்தகையதொரு  நிலைமை  ஏற்பட்டால் தலைமைத்துவத்தை வழங்க நீங்கள் தயாரா?

பதில்;ஆம். நாடு ஒரு தோல்வியுற்ற நாடாக மாறும் அபாயம் ஏற்பட்டால், சமூக நிறுவனங்களில்  சிதைவு ஏற்பட்டால், ஒரு அரசியல் இயக்கமாக அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு எ மக்கு உள்ளது.
 கேள்வி ;. ஆனால், வரலாற்றைநீங்கள்ஆராய்ந்தால்   இதேபோன்ற மக்களின் எழுச்சியை பல்வேறு ஆட்சிகள்எவ்வாறு அடக்கிவைத்துள்ளன என்பதையும், அது எவ்வாறு மிகவும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதையும்அறியமுடியும்  , இந்த நாடு மிக மோசமான நிலைக்கு இட்டுச் செல்லப்படலாம்?.
பதில்;அவை வரலாற்றில் புராணக்கதைகள் மட்டுமே. ராஜபக்சக்களால் மட்டுமல்ல, வேறு எவராலும் இந்த நாட்டை இவ்வாறான அடக்குமுறை ஆட்சிக்கு இட்டுச் செல்ல முடியாது. இராணுவம் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் பல நிர்வாகத் துறைகளில் பயன்படுத்தப்பட்டதை நாம் அறிவோம். இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு இடமில்லை. அதே சமயம் இராணுவத்தில் சில உயர் பதவிகள் மற்றும் சலுகை பெற்ற பிரிவுகள் அரசாங்கத்துடன் இருந்தாலும், நடுத்தர மற்றும் கீழ் நிலைகளில் உள்ள பெரும்பான்மையினர் இந்த பேரழிவு ஆட்சியுடன் இல்லை. இந்த நாசகரமான மற்றும் அழிவுகரமான ஆட்சியின் ஒரு பகுதியாக அவர்கள் இருக்க விரும்பவில்லை. அவர்களுக்கு  வலியும் உள்ளது. எனவே ராஜபக்சக்களுக்கு  எண்ணமும் தேவையும் இருந்தாலும்கூட  அதற்கான சாத்தியக்கூறுகள்இருப்பதாக நான் நினைக்கவில்லை.


கேள்வி ; ஜனதா விமுக்தி பெரமுன வின் ஜனநாயக அரசியல் வரலாற்றை நாங்கள் ஆய்வு செய்தால், உங்கள் கட்சிக்கான வாக்கு எண்ணிக்கையில் பெரிய மாற்றத்தை நாங்கள் காணவில்லை. 2004 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க அரசாங்கத்தில் தான் உங்கள் கட்சி வெற்றி பெற்றது. உங்கள் கட்சி ஊழலில்லாமல் செயற் பட முடியும் என்பதை அங்கு நிரூபித்தீர்கள். ஏனைய  கட்சிகளுடன் கூட்டணி வைப்பது நல்லது என்று நினைக்கவில்லையா ?

கேள்வி ;இந்த இரண்டு பெரிய கட்சிகளில் எதனுடனும் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என நாங்கள் நம்பவில்லை. அரசியலமைப்பு ரீதியாகவும் பாரம்பரிய ரீதியாகவும் நீங்கள் கருத்தில் கொண்டால், அதிகாரமானது ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் நீதித்துறையிடம் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. இந்த நிறைவேற்றுஅதிகார  ஜனாதிபதி முறை உருவாக்கியது என்னவென்றால், அதிகாரம் உண்மையான அதிகாரத்திற்கு வெளியே உள்ளது. சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சியில் அவர், மனோ தித்தவெல்ல, தாரா டி மெல் மற்றும் பாலபட்ட பெந்தி ஆகியோரும் மகிந்தவின் ஆட்சியில் மஹிந்த, லலித் வீரதுங்க, பசில் ராஜபக்ச மற்றும்கோத்தாபய ராஜபக்ச  ஆகியோரும்  இருந்தனர். பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி வந்தது ஜனாதிபதி மைத்திரிபால கூட அங்கு இல்லை. ரணில், மலிக், பாஸ்கரலிங்கம் மற்றும் சரித ரத்வத்தஇருந்தனர் . தற்போதைய ஆட்சியில் கோத்தாபய , பசில் மற்றும் ஏனையவர்கள் தான். எனவே பாரம்பரியமுறைமையில்  அதிகாரம் இல்லை. அமைச்சரவைக்குள் என்ன நடக்கிறது என்பது கூட இந்த அமைச்சர்களுக்குத் தெரியாது. அமைச்சரவைப் பத்திரங்களில் கையொப்பமிடாமல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர்களே கூறுகின்றனர். அமைச்சர்களின் அழுகை குரல் கேட்கிறது. எனவே நாங்கள் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்க விரும்பவில்லை. இந்த நாட்டுக்கான புதிய அரசியல் கலாசாரத்தை ஆரம்பிக்க வேண்டும், புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.


கேள்வி; பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உங்கள் அரசியல் கட்சியையும், உங்கள் அரசியல் பயணத்தையும் வெளிப்படையாகப் பாராட்டியதை நாங்கள் பார்த்தோம். இந்த இரண்டு முக்கிய முகாம்களில் வேறு அரசியல்வாதிகள் உங்களுடன் சேருவார்கள் என்று நினைக்கிறீர்களா?
பதில்;எங்களின் அரசியல் பயணம் மற்றும் செயற் பாடுகள் குறித்து நாங்கள் வெளிப்படையாகவே இருக்கிறோம். சேர தயாராக உள்ள அனைவருக்கும் எங்கள் பயணம் திறந்திருக்கும். தற்போது எமது பிரதான இலக்கானதுதேசிய மக்கள்  சக்தியை  பலப்படுத்துவதேயாகும்.
கேள்வி;நீங்கள் சந்திரிகா பண்டாரநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இனப்பிரச்சினை தொடர்பான உங்கள் நிலைப்பாடு என்பதை நாங்கள் கண்டோம். அதன் பின்னர் நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரையும்  அது  இராணுவ ரீதியாக தோற்கடிப்பதையும் வெளிப்படையாக ஆதரித்தீர்கள் . ஆனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இலங்கையின்  இனப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வு என்ன?


 பதில்;அவர்கள் நம்பும் மதம், அவர்கள் பேசும் மொழி மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசாரம் கொண்ட அனைத்து பிரஜைகளும்  சமமாக நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இரண்டாம் தர குடிமக்கள் இல்லை. அவர்கள் இந்த அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்பினால், அவர்கள் ஆளுகையின் சம பங்குதாரர்களாக இருக்க வேண்டும். தமிழர்களுக்கும்   முஸ்லிம்களுக்கும்  பல வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி விட்டார்கள் என்று நம்புகிறோம். அவர்கள் சமமானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ஒவ்வொரு மதத்திற்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், ஒவ்வொரு கலாசாரத்தையும் மதித்து, நிர்வாகத்தில் உங்கள் சொந்த மொழியுடன் தொடர்புகொள்வதற்கும், சமமாக ஏற்றுக்கொள்வதற்கும் உத்தரவாதம் அளித்து, அவர்கள் வளர்ச்சியில் முன்னேற முடியும். அந்தந்த பகுதிகள் மற்றும் அதிகாரத்தின் பங்குதாரர்களாக இருக்கவேண்டும் . அவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்று நம்புகிறோம்.


கேள்வி ;அதிகாரப் பகிர்வு என்று நீங்கள் கூறும்போது,சமஷ்டி  முறைமை யின் மூலம் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறீர்களா?

பதில் ;சமஷ்டி முறைமையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் அவர்கள்  சம மான அரசியல் உரிமைகள் மற்றும் அதிகாரத்தை வைத்திருப்பதற்கான உரிமைகளை நாங்கள் உத்தரவாதம் செய்ய வேண்டும். அப்படி இல்லாமல்சமஷ்டி முறை மை மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது.


கேள்வி; மாகாண சபை முறைமை பற்றி?

பதில்;தற்போது அரசியலமைப்பில்   மாகாண சபை முறைமை உள்ளது. மாகாணசபை  முறைமை  ஒரு தோல்வியுற்ற நிர்வாக முறை மையாகும்.  தேசிய நெருக்கடியிலும் கூட இதுவொரு  தோல்வியாகும். ஆனால் அது அவர்களின் உரிமை என்று அந்த மக்கள் நம்பினால், மாகாணசபை முறை  இருக்க வேண்டும்.


கேள்வி ;யுத்தத்தில் பெருமளவிலான மனித உயிர்கள் பலியாகியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சவாலை நாடு எதிர்கொள்கிறது. யுத்தத்தை ஆதரிக்க ஜே.வி.பி எடுத்த தீர்மானம் சரியானது என நினைக்கிறீர்களா?

 பதில் ;யுத்தத்தின் போது சாதாரண தமிழ் மக்கள் எதிர்நோக்கிய  நெருக்கடிகள்  பற்றி நாம் இன்னும் தீவிரமாக சிந்தித்திருக்க வேண்டும். ஒரு இடதுசாரி அரசியல் இயக்கமாக நாங்கள் எங்கள் பொறுப்புகளில் தவறிவிட்டோம். அதைப் பற்றிய சுய பகுப்பாய்வு எங்களிடம் உள்ளது.
கேள்வி ; நடந்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில் ;நாங்கள் ஒரு தீவிரமான  அரசியல் இயக்கம். யுத்தத்தின் போது இராணுவமும் அரசாங்கமும்ஒரே  பிரிவாக செயற்படுகின்றன.   சாதாரண பொதுமக்கள்மோதலில்  சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஒரு இடதுசாரி அமைப்பாக நாம் இதைப் பற்றி இன்னும் தீவிரமாகச் சிந்தித்திருக்க வேண்டும், நாம் இன்னும் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தவறியது எங்கள் பக்கம் உள்ள குறைபாடுகள் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.


கேள்வி;   சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் உங்களுடன் இணைய விரும்பினால் உங்கள் கருத்து  என்ன?

பதில் ;நாங்கள் திறந்துவைத்திருக்கிறோம்  . சிங்களத் தலைவர்களுடன் மட்டுமன்றி, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுடனும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நம்புகின்றோம். அனைத்து தலைவர்களையும் உள்ளடக்கிய அதிகாரம் எ மக்கு வேண்டும். நாம் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சமமாகப் பகிர்ந்துகொள்ளும் அதிகாரத்தை உருவாக்க வேண்டும்.  பாரம்பரிய தலைவர்கள் மட்டுமல்ல, இந்த சமூகங்களில் இருந்து புதிய தலைவர்கள் இருக்க முடியும். அவர்களை மேலிருந்து கட்டாயப்படுத்துவது ஒரு சக்தியல்ல. எனவே தமிழர்களையும் முஸ்லிம்களையும் வெளிப்படையாக அழைக்கின்றோம்.
சிங்களவர்கள் மட்டும்  அதிகாரத்திலும் நிர்வாகத்திலும் இருக்கவேண்டும்என்று நாங்கள்நம்பவில்லை  . எ மது விருப்பம்  அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாக இருக்கும்.


கேள்வி;எவ்வாறா யினும்  ஜே.வி.பி ஒரு சிங்கள பௌத்த அமைப்பு என்றஎண்ணப்பாடு மக்கள் மத்தியில் உள்ளதா? அல்லது உங்களை விட்டு வெளியேறிய உங்கள் முன்னாள் தலைவர்கள் சிலர் சித்தரித்த பிரதிமையா ?

பதில்;எங்களை விட்டு சென்ற வர்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. ஆனால் எமது அமைப்பு தொடர்பில் நியாயபடுத்தக்கூடிய  சந்தேகம் இருக்கலாம், ஆனால் அளுத்கம, திகன மற்றும் ஏனைய இடங்களில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இடம்பெற்ற போதும், உயிர்த்த  ஞாயிறு தாக்குதல்களின் போதும் நாங்கள் உண்மையின் பக்கம் நின்றோம். நாங்கள் நீதியின் பக்கம் நின்றோம். பல தலைவர்கள் தங்கள் வாக்குகளின் அடிப்படையில் நின்றதை நாங்கள் அறிவோம், ஆனால் நாங்கள் வாக்குகளைப் பற்றி கவலைப்படவில்லை. எந்த இனச் சமூகமாக இருந்தாலும்அடக்கப்பட்ட சமூகத்துடன்   நாங்கள் நிற்போம்
நாங்கள் இனவாத அரசியலில் ஈடுபடவில்லை, ஆனால் இன நல்லிணக்கத்தின் கொடியை ஏந்தியுள்ளோம். நாங்கள் இனஒற்றுமையின்மைக்கு  எதிரான கட்சி.


கேள்வி ;எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால்  தமிழ் தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்றத்தில் மூன்றாவது அதிக ஆசனங்களைக் கொண்டுள்ளது. அத்தகைய தொரு அரசியல் கூட்டணியுடன் இணைந்து செயற் பட நீங்கள் தயாரா?.

பதில் ; எங்கள் கதவுகள் திறந்திருக்கும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக உள்ளோம்.

link-dailymirror
”We don’t believe in Sinhala only power” – Anura Kumara Dissanayake



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »