Our Feeds


Wednesday, January 26, 2022

ShortNews

சீனாவின் அரிசியை பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு வரும் - ஐ.ம.ச MP அதிர்ச்சித் தகவல்



சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை பொதுமக்கள் பயன்படுத்தினால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி, நேற்று (25) தெரிவித்தது.


கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

சீனாவில் அதிகளவான இரசாயன உரங்கள் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் தரமற்ற உணவை உட்கொள்வதால் சிறுநீரக நோய்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் நாளாந்தம் 6.5 மில்லியன் கிலோ கிராம் அரிசி நுகரப்படும் அதேவேளை 3.5 மில்லியன் பாணும் நாளாந்தம் உட்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

ஒரு ஹெக்டேர் செய்கைக்கு 137 கிலோ யூரியா உரம் பயன்படுத்தப்படுகிறது எனவும் சீனா 500 கிலோ கிராம் உரத்தைப் பயன்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டார்.

இரசாயன உரத்தை 3-4 மடங்கு அதிகமாக பயன்படுத்தும் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி பாவனைக்கு பாதுகாப்பானதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »