செய்ய முடியாததை செய்ய முயற்சித்தமையினாலேயே, முழு நாட்டையும் கஷ்டத்திற்குள் தள்ளியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
தெல்கந்த சந்தையில் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்வதற்காக வருகைத் தந்த வேளையில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உரத்தை இல்லாது செய்யாமல், விவசாயிகள் எவ்வாறு விளைச்சலை பெற்றுக்கொள்வார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மரக்கறி உள்ளிட்ட பொருட்களின் விலைகளை முன்னதாகவே திட்டமிட்டு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என கூறிய அவர், இதற்கான பொறுப்பை தீர்மானங்களை மேற்கொண்டவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய அமைச்சர், தனது கடமைகளில் தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தமது அரசாங்கம் என்ற போதிலும், தன்னை தீர்மானம் எடுக்கும் இடத்தில் வைக்கவில்லை எனவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிடுகின்றார்.
சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலம் இருந்தாகவும், தற்போது அந்த காலம் கடந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், சரியான தீர்மானங்களை வேறொரு தரப்பினரே எடுக்க வேண்டி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
செய்யக்கூடியவர்களுக்கு ஒப்படைத்து விட்டு, செய்ய முடியாதவர்கள் விலக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிடுகின்றார்.