கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விடயங்களை ஆராயும் manthri.lk இணையதளத்தினால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2022 பெப்ரவரியில் பாராளுமன்றத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட ஐந்து எம்.பி.க்களாக பின்வருவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1. ஜோன்ஸ்டன் பெனாண்டோ
2. அலி சப்ரி
3. லக்ஷ்மன் கிரியெல்ல
4. பந்துல குணவர்தன
5. சாணக்கியன் ராசமாணிக்கம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுமான ஜோன்ஸ்டன் பெனாண்டோ, அலி சப்ரி ஆகிய மூவர் பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகிய ஐவர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
