சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
2015 இல் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது குடும்ப ஆட்சி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விட அதிகளவில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குடும்ப ஆட்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
2015 இல் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்களே பதவி வகித்தனர் தற்போது அதனை விட அதிகமானவர்கள் பதவி வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
