(எம்.மனோசித்ரா)
நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய நிலைமையில் அரசாங்கத்தின் நிதி நிலைவரம் இல்லை. தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் நெருக்கடிகள் மாத்திரமே காணப்படுவதைப் போன்று ஊடகங்களும் செய்திகளில் காண்பிக்கின்றன.
அத்தோடு கொழும்பில் திங்களன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பஸ் ஒன்றும் மறிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இது எதிர்காலத்தில் நாட்டின் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
