Our Feeds


Sunday, March 27, 2022

Anonymous

கட்டார் அரசிடம் உக்ரைன் ஜனாதிபதி முன்வைத்துள்ள மிக முக்கிய கோரிக்கை!

 



எரிசக்தியை ஆயுதமாகப் பயன்படுத்தும் ரஷ்யாவின் முயற்சிகளை எதிர்கொள்வதற்கு, கத்தார் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.


கத்தார் தலைநகர் தோகாவில் சர்வதேச அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களின் வருடாந்த கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அணு ஆயுதங்களைப் பற்றிய ரஷ்யாவின் தற்பெருமை, ஆபத்தான ஆயுதப் போட்டியைத் தூண்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.


அத்துடன் ‘ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டுமின்றி முழு உலகையும் அணு ஆயுதத்தால் அழிக்க முடியும் என்று தற்பெருமை பேசுகிறார்கள்.


1990 களில் உக்ரைன் தனது அணுசக்தி கையிருப்பை அகற்றியபோது ரஷ்யா உட்பட உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கின’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »