Our Feeds


Monday, April 25, 2022

ShortTalk

12 வாரங்களில் கையிருப்பில் உள்ள மருந்துப் பொருட்கள் நிறைவடையும். - வைத்தியர்களின் தொழிற்சங்கம் அதிர்ச்சித் தகவல்



மருந்துப் பொருட்களின் விலை தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


அதன் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையின் காரணமாக தற்போது மருந்துப்பொருட்களின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது.

இன்னும் 12 வாரங்களில் கையிருப்பில் உள்ள மருந்துப்பொருட்கள் நிறைவடையும் என்பதால் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.

சாதாரண மருந்துகளுக்கு கூட 1,500 முதல் 2,000 ரூபா வரையில், செலவிட வேண்டியேற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »