(கிண்ணியா மேலதிக நிருபர்)
தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை குறித்து, இன்று(17) கிண்ணியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே, கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரச அதிருப்தியாளர்களுடனும் எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும். ஏனெனில் எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வரும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை அவர்கள் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. ஆனால், 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்தை ஒழிப்பதற்கு அவர்களின் ஆதரவை தர முடியாதிருக்க முடியாது. எனவேதான் முதலில் எதைச் செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் மக்களின் தன்னெழுச்சி போராட்டமாக நாடுபூராகவும் அரசுக்கு எதிராக மக்கள் மேற்கொண்டுவரும் இந்தப் போராட்டம் ஆளும் கட்சியை மாத்திரமன்றி எதிர்க் கட்சியையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது
மக்களின் இந்தப் போராட்டம், ஆளும் கட்சியின் தலைமைக்கும் எதிர்க் கட்சியின் தலைமைக்கும் இந்த நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவதில் பங்குள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது
அன்று ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு ஒரு சமூகத்தை குறிவைத்து இனவாதிகளும் அரசியல்வாதிகளும் தாக்குதல் நடத்தினார்கள்,
ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்தின் முன் முதலாவது போராட்டம் நடத்திய அந்த நாளிலேயே அரபு வசந்தம் மற்றும் அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்தி, அந்த சமூகத்தின் மீது மீண்டும் இதே இனவாதிகள் பழி சுமத்த முற்பட்டபோது, சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டிருப்பது, எப்போதும் இனவாதம் பேசி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது
சமகாலத்தில் பொருளாதார வீழ்ச்சியானது உலகில் பல நாடுகளில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் அவர்களின் சரியான பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாக அவற்றிலிருந்து மீண்டுள்ளார்கள். இதற்காக அவர்கள் உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் 20 க்கு கை தூக்கிய 7 முஸ்லிம் உறுப்பினர் தொடர்பான கோஷங்கள் இன்று காலி முகத்திடலில் ஆட்கொண்டுள்ளன. இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பை கருத்திற் கொள்ளாமல், நாடாளுமன்ற அதிகாரத்தை ஒரு தனி நபருக்குக் தாரைவார்த்து கொடுத்ததன் விளைவே இன்று நாட்டு மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என அவர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துார்.