Our Feeds


Tuesday, April 5, 2022

ShortNews

இந்த கொள்கலனுக்கு ஏன் பலத்த பாதுகாப்பு? - துறைமுக அதிகார சபை கூறும் விளக்கம் இதுதான்.



விசேட பாதுகாப்பு அணியினர் பாதுகாப்பு வழங்க, அந்த அணியின் மோட்டார் படையணி ​இருபுறங்களிலும் பயணிக்க, கடுமையான பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 0270586 என்ற இலக்கத்தை கொண்ட கொள்கலனே இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது. “இந்த கொள்கலனுக்கு ஏன்? இந்த பாதுகாப்பு” என சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டு கேள்வியெழுப்பியுள்ளனர்.


இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் முனையத்தில் கொண்டு செல்லப்பட்ட கொள்கலன் தொடர்பான தவறான தகவல்கள் அடங்கிய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

காணொளியில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கலன் நடவடிக்கையானது, இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் அனுமதியுடன் கதிரியக்க திரவத்தை அகற்றுவதற்காக மீள் ஏற்றுமதி செய்வதாகும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »