Our Feeds


Tuesday, April 12, 2022

ShortTalk

போலந்து ஜனாதிபதி கொல்லப்பட்ட விமான விபத்துக்கு ரஷ்யாவே காரணம் - மீண்டும் பகிரங்க குற்றம் சாட்டியது போலந்து



போலந்து ஜனாதிபதி லெக் கச்சின்ஸ்கி மற்றும் பாதுகாப்புப் படையினா் உள்பட 95 போ் கொல்லப்பட்ட விமான விபத்துக்கு ரஷ்யாதான் காரணம் என அந்த நாடு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.


போலந்து நாட்டின் பெண் அதிபா் லெக் கச்சின்ஸ்கி உள்ளிட்ட 95 போ் சென்ற சோவியத் தயாரிப்பு விமானம் 2010, ஏப்ரல் 10ஆம் திகதி ரஷ்யாவில் விபத்துக்குள்ளானது. இதில் ஜனாதிபதி உட்பட அனைவரும் உயிரிழந்தனா். இந்த சம்பவத்துக்கு ரஷ்யாவின் சதிச் செயல்தான் காரணம் என போலந்து ஏற்கெனவே குற்றம்சாட்டி வந்தது.

இந்நிலையில், இதுதொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட அரசு சிறப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கையை திங்கள்கிழமை வெளியிட்டு ஆணையத்தின் தலைவா் ஆன்டனி மெசியா்விக்ஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது, விமானத்தின் இடதுபக்க இறக்கையில் முதல் குண்டும், மைய பகுதியில் இரண்டாவது குண்டும் வெடித்துள்ளது. ரஷ்ய தரப்பின் சட்டவிரோத தலையீடே இந்த சம்பவத்துக்கு காரணம். இந்த சம்பவத்தில் விமானிகளின் தவறு எதுவும் இல்லை என்றாா்.

போலந்தின் அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துள்ள நிலையில், இந்த விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தப் போரில் உக்ரைனுக்கு போலந்து ஆதரவு தெரிவித்து வருகிறது.

முன்னதாக, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட மனிதத் தவறுகளால் இந்த விபத்து நிகழ்ந்ததாக, விமான விபத்துகள் தொடா்பான ஆய்வு செய்யும் போலந்து, ரஷ்யாவை சோ்ந்த இரு நிபுணா் குழுக்களின் அறிக்கை தெரிவித்திருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »