Our Feeds


Tuesday, April 5, 2022

ShortNews

BREAKING: அரசாங்கம் உடனடியாக விலக வேண்டும்; என அமரபுர மற்றும் ராமான்ய பௌத்த பீடங்கள் அறிவிப்பு.



அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டும் என அமரபுர மற்றும் ராமான்ய பௌத்த பீடங்கள் வலியுறுத்தியுள்ளன.


அனைவரும் தமது கௌரவத்தைப் பாதுகாத்துக்கொண்டு, பதவி விலகி, இடைக்கால அரசாங்கம் அல்லாமல் புதிய அரசாங்கத்தை ஜனநாயக அரசியலமைப்பின்படி அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமரபுர மற்றும் ராமான்ய பௌத்த பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

‘அரச நிர்வாகம், நிதி நிர்வாகம், பொருளாதாரா முகாமைத்துவம், மக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்தல் உட்பட அனைத்திலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலைமைக்கு தீர்வு காணப்படாவிட்டால் பாரிய இரத்த வெள்ளம், மரணங்கள் ஏற்பட்டு, சொத்துகள் இழக்கப்பட்டு பாரிய நாசம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.

அரசாங்கம் இதை உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. சில அமைச்சர்கள் இது அடிப்படைவாதிகளின் வேலை என்கின்றனர். இது உண்மையல்ல’ எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »