(பைஷல் இஸ்மாயில்)
ராஜபக்க்ஷ அரசுக்கு எதிராக கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், உலக தலைவர்கள் எதிர்நோக்காத பாரிய எதிர்புக்களையும், அவமானங்களையும் எமது நாட்டின் ஜனாதிபதி எதிர்நோக்கி வருகிறார். அவருக்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில் மட்டுமல்லாமல் உலக நாட்டிலுள்ள சகல இலங்கையர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாமும், எமது நாடும் கடன் சுமையால் ஏற்கெனவே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ராஜபக்க்ஷ குடும்பத்தினர் இதை கவனிக்காது கடனுக்குமேல் கடன்பட்டு நாட்டை கொள்ளையடித்துச் செல்கின்றனர். கடன் சுமையை இன்னும் பல மடங்குகளாக அதிகரிக்கச் செய்துவிட்டார்கள். அதுமாத்திரமின்றி நாட்டையும் மக்களையும் வேறு நாட்டுக்கு விற்றுவிட்டு தப்பிச் செல்லும் நிலைமையில் உள்ளார்கள்.
ராஜபக்ஷக்களின் செயற்பாட்டை அறிந்த மக்களும், சில அரசியல்வாதிகளும் அதற்கொதிராக குரல் கொடுத்தனர். அவ்வாறவர்களை ராஜபக்க்ஷ குடும்பத்தினர் ஏதோ ஒரு வழியில் வாய் பேசாதவாறு செய்து விடுகின்றர். இந்நிலைமையில் அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர், பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை முடக்கும் யுக்திகளைக் கையாண்டு அவர்களின் செயற்பாடுகளையும் முடக்கினர். இவை அனைத்துக்கும் எதிராக பொதுமக்கள் பொங்கி எழுந்து இன, மத வேறுபாடுகளுக்கப்பால் இணைந்து கொண்டு வீதிக்கு இறங்கினர்.
