Our Feeds


Tuesday, April 5, 2022

ShortNews

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து ஹெலிகப்டரில் தப்பித்த ஆளும் கட்சி MP



கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், தனது வீட்டை நோக்கி வருவதை அவதானித்த அரசியல்வாதி ஒருவர், தனிப்பட்ட ஹெலிகொப்டரில் குடும்பத்துடன் பறந்த சம்பவமொன்று நேற்று (04) இடம்பெற்றுள்ளது.


கேகாலை சுதந்திர மாவத்தையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும், கேகாலை நகர சபை மைதானத்திலேயே இந்த ஹெலி தரையிறங்கியுள்ளது.

அந்த பிரதேசத்தின் பிரபல அரசியல்வாதியொருவர் தன்னுடைய குடும்பத்தினருடன் அந்த ஹெலியில் பறந்துசென்றுவிட்டார் என பி​ரதேசவாசிகள் தெரிவித்தனர்.

அந்த ஹெலி, கண்டி பக்கமாக பறந்துள்ளதாக அறியமுடிகின்றது.

கேகாலை மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்தின் வீடு, நகர சபை மைதானத்துக்கு அருகில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »