மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கு இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி தேவை.
மேலும், கட்டண திருத்தம் செய்தால், திருத்த முன்மொழிவை பொதுமக்களிடம் சமர்ப்பித்து, பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.