Our Feeds


Wednesday, April 20, 2022

ShortTalk

இந்த அரசு மனித படுகொலை செய்கிறது- சஜித் பாராளுமன்றில் கடும் ஆவேசம் - VIDEO



ரம்புக்கனையில் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பவுசருக்கு தீ வைக்க வந்தவர்கள் அல்லவென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இந்த அரசாங்கம் போராட்டக்காரர்களை ஒடுக்க நினைகிறது. இதுவொரு மனிதர்களை படுகொலை செய்யும் அரசு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இன்று ரம்புக்கனையில் கொடுத்த சமிக்ஞையானது நாடு முழுவதும் இடம்பெறும் போராட்டத்திற்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கையாகவே நாம் பார்க்கிறோம்.

இன்று 12 மணிக்கு முதல் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அனைவரையும் அழைக்குமாறும், அவர்களை அழைத்து ரம்புக்கனை விவகாரத்தை விசாரிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள யார் அனுமதி வழங்கினார்கள் எனவும் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.

மேலும், ரம்புக்கனை சம்பவத்தை முழுமையாக விசாரிக்குமாறு பொலிஸ்மா அதிபர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஓய்வுபெற்ற நீதியரசர்களை கொண்டு முழுமையான விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அங்கிருந்த பஸ் மீதும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களே தீ வைத்தனர்- என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »