Our Feeds


Thursday, May 26, 2022

ShortTalk

புத்தளம் அல்-சுஹைரியா மத்ரஸா அதிபர் மெளலவி சலீம்கான் மொஹம்மட் சகீல் பிணையில் விடுதலை!



(எம்.எப்.எம்.பஸீர்)


உயிர்த்த ஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை,  சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுடன் அவ்வழக்கை எதிர்கொள்ளும் புத்தளம்  அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் அதிபர் மெளலவி சலீம்கான் மொஹம்மட் சகீல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


கடந்த 2021 பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் விளக்கமறியலிலிருந்து வந்த நிலையிலேயே அவர் நேற்று (25) புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி,  நதீ அபர்ணா குணதிலகவினல்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சகீல் மெளலவியின் சட்டத்தரணிகள்  நகர்த்தல் பத்திரம் ஊடாக முன் வைத்த பிணை கோரிக்கைக்கு அமைய இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »