ஆர்ப்பாட்டம் காரணமாக மெதிவெலவில் அமைந்திருக்கும் நாடாளுமன்ற
உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வீடமைப்புத் தொகுதியை நோக்கிச் செல்லும் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு வளாகத்திற்கு அருகாமையில் இருந்து கிம்புலா எல நோக்கி செல்லும் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பிடகோட்டே சந்தியில் இருந்து தலவத்துகொட மற்றும் பெலவத்தை நோக்கி செல்லும் வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.