Our Feeds


Monday, June 27, 2022

ShortNews

மொத்தம் 7 பில்லயன் வேண்டும் - IMF பதிலுக்காக காத்திருக்கும் ரணில்



சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக 6 பில்லியன் டொலர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.


அத்துடன் ரூபாயை நிலைப்படுத்த மேலும் ஒரு பில்லியன் டொலரையும் அவர் கோரியுள்ள நிலையில் இதற்கு சாதகமான பதில் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார் .

தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என விரும்புவோர் பிரதமருக்கு ஆதரவாக இருந்தால், சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் .

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஒருமித்த கருத்தே அதற்கான ஒரே வழி என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »