Our Feeds


Sunday, June 26, 2022

SHAHNI RAMEES

நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் சைக்கிளுக்கான பெற்றோலை பெற்றுக் கொண்ட வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்!


 வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ. கேதீஸ்வரன் எரிபொருள் வரிசையில் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுகாதார சேவைகள் திணைக்களத்தினருக்கான பெற்றோல் விநியோகம் சனிக்கிழமை (25) மாலை வடமராட்சி, புலோலி பல நோக்கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகிக்கப்பட்டது.

இதன் போது 4 கிலோ மீற்றர் வரை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வரிசையில் காத்திருந்தன.

இந்த வரிசையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. கேதீஸ்வரனும் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கான பெற்றோலைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்போது, பல நூற்றுக்கணக்கான தாதியர்கள், வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக் கொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »