இலங்கை அரசினால் நிராகரிக்கப்பட்ட சீன பசளை கப்பலுக்கு பதிலாக புதிய கப்பல் ஒன்றை வழங்க முடியாது என அதிகாரிகளுக்கு குறித்த சீன நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சீன நிறுவனம் சார்பில் நாட்டின் முகவர் நிறுவனம் கடந்த தினம் விவசாய அமைச்சில் அதிகாரிகள் சிலருடன் நடத்திய சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியானது.
சீன பசளை நிறுவனம் அவ்வாறான அறிவிப்பை வெளியிட்டாலும் அவர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல் நடத்தி வருவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
