அரசாங்க உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அல்லது பிற தேவைகளுக்குச் செல்வதற்கு 5 வருட விடுமுறையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க ஊழியர்களின் சேவைக்கால அனுபவம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்குப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அவர்களுக்கு 5 வருட காலத்துக்கு சம்பளமில்லாத விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அல்லது பிற வேறு தேவைகளுக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.