ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் குறைந்தபட்சம் 920 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரிலிருந்து 47 கிலோமீற்றர் தொலைவில் இப்பூகம்பம் ஏற்பட்டது.
6,1 ரிக்டர் அளவிலான இப்பூகம்பத்தினால் இதுவரை குறைந்தபட்சம் 920 பேர் உயிரிழந்துள்ளதுடன், 600 பேர் காயமடைந்துள்ளனர் என ஆப்கானிஸ்தானின் இடர் முகாமைத்துவ அமைச்சர் ஷராபுதீன் முஸ்லிம் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 300 பேர் உயிரிழந்தனர் என தெரிவித்த ஆப்கானிஸ்தான் அரசின் உயர் தலைவர் ஹபிபுல்லா அகுன்ஸதா, இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரித்திருந்தார்.
சென்றடைவதற்குக் கடினமான மலைப்பிரதேசங்களிலிருந்து இழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகும் நிலையில் இ உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இதுவரை 920 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 600 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அமைச்சர் ஷராபுதீன் முஸ்லிம் தெரிவித்துள்ளார்.
இப்பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
