நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 498 ஓட்டங்களை குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 498 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 162 ஓட்டங்களையும், டேவிட் மாலன் 122 மற்றும் பில் சால்ட் 122 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
முன்னதாக, சர்வதேச ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்ட 481 ஓட்டங்களே உலக சாதனையாக காணப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தனது சாதனையை இங்கிலாந்து அணி புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


