Our Feeds


Friday, June 17, 2022

SHAHNI RAMEES

திமிங்கலத்தின் வயிற்றுக்குள் சென்று உயிருடன் தப்பிய நபரின் திகிலூட்டும் அனுபவம்...

 

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் 57 வயதான மைக்கேல் பேக்கார்ட். இவர் ஆழ்கடலில் சென்று நீச்சல் அடிப்பதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆழ்கடலில் 'டைவிங்' சென்ற போது, தன்னை ஒரு திமிங்கலம் விழுங்கிவிட்டதாகவும், அதன் வயிற்றில் இருந்து சுமார் 40 நொடிகளுக்குள் தான் தப்பி வந்ததாகவும் அவர் கூறுகிறார்.

மைக்கேல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கம் போல கடலில் டைவ் அடித்து சுமார் 10 அடி ஆழத்திற்கு கீழ் சென்றுள்ளார். அப்போது அங்கு வேகமாக வந்த ஹம்ப்பேக் வகை திமிங்கலம், அவரை அப்படியே அலேக்காக விழுங்கிவிட்டதாகவும், பின்னர் தான் நேராக திமுங்கலத்தின் வயிற்றுக்குள் சென்றுவிட்டதாகவும் கூறுகிறார் மைக்கேல்.

அதோடு தனது வாழ்வு முடிந்துவிட்டதாக மைக்கேல் எண்ணியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் அவரை விழுங்கிய திமிங்கலம் கடலின் மேற்பரப்பிற்கு வந்து தனது தலையை தூக்கியுள்ளது. அப்போது சிறிய வெளிச்சத்தைக் கண்ட மைக்கேல், திமிங்கலத்தின் வயிற்றை மாறி, மாறி இடித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட அசவுகரித்தில் திமிங்கலம் தனது வாயை திறக்க, அப்படியே குதித்து வெளியே தப்பிவிட்டதாகவும், இந்த நிகழ்வு முழுவதும் சுமார் 40 நொடிகளில் நடந்து முடிந்ததாகவும், மைக்கேல் கூறியுள்ளார். அவரது இந்த திகிலூட்டும் அனுபவத்தை இணையத்தில் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »