எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையாக தடை விதிக்க மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது.
உணவுப்பொருள் சாா்ந்த பசுமை மண்டல வாயு வெளியேற்றத்தில் பிளாஸ்டிக் 5.4 சதவீதம் பங்கு வகிக்கிறது.
எனினும், உணவுப் பொருள்களை நீண்ட காலம் கெட்டுப்போகாமல் வைப்பதற்காக அந்நாட்டில் பிளஸாட்டிக் பொருட்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, அவற்றை தடை செய்வதன் மூலம் உணவுப் பொருள் வீணாகும் சவாலை மலேசியா எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
