கடந்த 26ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வாரத்தில் மொனராகலை பொலிஸ் பிரிவில் மாத்திரம் நால்வர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொனராகலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொனராகலை ஹிந்திகியுல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி, தொம்பகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான நபர், புத்தல போதியபர பில்லவெல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமானவர் மற்றும் கும்புக்கன கல்வல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஆகியோர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
காதல் முறிவு, குடும்ப தகராறு, பொருளாதார பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்கொலை என்பது சமூகப் பிரச்சனையாகிவிட்டதாகவும், இது தொடர்பில் கிராம அளவில் பணியாற்றும் அரச அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.