வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு அட்டை (கார்ட்) முறையை அமுல்படுத்தவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அமுல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒரு வாரத்தில் ஒருவர் 100 லீற்றர் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும். அவற்றில் 60 லீட்டர் எரிபொருளை தான் பதிவு செய்துள்ள எரிபொருள் நிலையத்திலும் ஏனைய 40 லீற்றரை நாட்டின் எந்தவொரு எரிபொருள் நிலையத்திலும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை வழங்குவதற்கு 2 புதிய சர்வதேச நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன எளன்று அவர் தெரிவித்தார்.
