Our Feeds


Tuesday, June 28, 2022

SHAHNI RAMEES

கமல் குணரத்னவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு



மைனாகோகம, கோட்டாகோகம உள்ளிட்ட

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுத்தார்களா என்பதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆஜராகியுள்ளார்.


இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மேலும், முன்னாள் அமைச்சர்களான சன்ன ஜயசுமன மற்றும் டொக்டர் ரமேஷ் பத்திரன ஆகியோரிடமும் ஆணைக்குழு நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளது.


முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.


தற்போது வரை சுமார் 30 அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட தலைமையிலான இந்த ஆணைக்குழு, ஜனாதிபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »