கொட்டாவ-மாகும்புறவில் அமைந்துள்ள பன்முக போக்குவரத்து நிலையப் பகுதியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எரிபொருள் கோரி பலர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பன்முக போக்குவரத்து நிலையத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்து பஸ்களை வெளியேற விடாமல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகிறது.