பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டமை இலகுவான விடயம் அல்ல என்பதை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இக்கட்டான நேரத்தில் இவ்வாறான கடினமான பணியை இரும்பு மனம் கொண்ட ஒரு மனிதனால் மட்டுமே செய்ய முடியும் எனவும் ரங்கே பண்டார தெரிவித்தார்.
ராஜபக்ஷ ஆட்சியின் மீதான சர்வதேச நம்பிக்கை முற்றாக சிதைந்து, உதவிய நாடுகள் முற்றாக விலகியிருந்ததாகவும், இன்று ரணில் விக்கிரமசிங்கவினால் அந்நாடுகளின் உதவிகள் அனைத்தையும் மீளப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
ஆனாலும், ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி என்பன “ரணிலுக்கு சர்வதேச சமூகத்திடம் இருந்து வந்த உதவிகள் எங்கே?” என்று கேட்கின்றனர். இந்த தருணத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்காவிட்டால் நாடு பாரிய அழிவை சந்தித்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
