10 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை நாட்டுக்கு கடத்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடலில் மறைத்து வைத்திருந்த நகைகளுடன் இந்த பெண் துபாயிலிருந்து கட்டுநாயக்க வந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபரான பெண் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
