Our Feeds


Wednesday, June 29, 2022

ShortNews

பிறப்பு, இறப்பு, திருமணம், மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!


பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்குவதை பதிவாளர் நாயகம் திணைக்களம் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது.



அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் பிரிவுகளினால் வழங்கப்படும் சேவைகள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சேவைகள் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திணைக்களத்தின் பத்தரமுல்ல, குருநாகல், கண்டி, மாத்தறை ஆகிய பிரதேச செயலகங்களின் மாவட்ட பதிவாளர் பிரிவுகளும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகங்களும் வழமை போன்று வாரத்தில் 5 நாட்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »