Our Feeds


Monday, June 27, 2022

ShortNews

BREAKING: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் இனி இல்லை… மீண்டும் லொக் டவுனா?



இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அதற்கமைய, நாட்டில் தற்போது 1,100 தொன் பெற்றோல் மற்றும் 7,500 தொன் டீசல் மட்டுமே உள்ளது.

இலங்கை கடனை செலுத்த தவறியதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கையை மோசமாக ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இலங்கைக்கு எரிபொருளை வழங்க சர்வதேச வங்கியிடம் உத்தரவாதம் கோருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் எதுவும் வரவில்லை எனவும், விரைவில் எரிபொருள் கப்பல் வரவில்லையென்றால், பொது போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக முடங்கிவிடும் எனவும் குறித்த நாழிதல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள குறைந்தளவான எரிபொருட்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான டோக்கன் முறை பயனற்ற விடயம் என்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாததால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »