27 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை நேற்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு விண்டோஸ் 95 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், 90ஆம் ஆண்டுகளில் சிறுவர்களின் ஆடம்பர அறிவியல் உலகின் தொடக்கமாக இருந்தது.
காலப்போக்கில், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக போனதாலும், மேம்படுத்திய தேடுபொறிகளின் வருகையாலும், அதன் சேவையை மைக்ரோசொப்ட் நிறுவனம் இன்றுடன் நிறுத்தியுள்ளது.
