Our Feeds


Wednesday, June 22, 2022

ShortTalk

அடுத்த வாரம் முதல் நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் - JVP தலைவர் அனுரகுமார அதிரடி அறிவிப்பு



(எம்.மனோசித்ரா)


அரசாங்கத்தை பதவி விலகச் செய்வதற்கான மக்களின் ஆர்ப்பாட்டங்களை புத்துயிர் பெறச் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். அதற்கமைய அடுத்த வாரம் முதல் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பாரிய  ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (ஜே.வி.பி.) அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (22) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்த அமைச்சரவைக்கு தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்கும் உரிமை கிடையாது. மக்களைப் பற்றி எவ்வித கவலையுமற்ற அரசாங்கமே தற்போது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்க்ஷ குடும்பத்தின் பாதுகாவலராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். கோட்டாபய ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் மீண்டும் அவர்களின் அரசியல் விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர்.

எனவே மக்களின் ஆர்ப்பாட்டங்களை மீண்டும் புத்துயிர் பெறச் செய்து , அவர்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதற்கமை எதிர்வரும் 26 ஆம் திகதி அநுராதபுரத்திலும் 27 ஆம் திகதி குருணாகலிலும் ,28 ஆம் திகதி மாத்தறையிலும் 29 ஆம் திகதி களுத்துறையிலும் ஜூலை முதலாம் திகதி அம்பலாந்தோட்டையிலும் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »