பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இரத்தினபுரி மேல் நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் காலிமுகத்திடல் போராட்ட களத்தில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாலியல் துஷ்பிரயோக வழக்கு ஒன்றின் பிரதான சந்தேக நபரான இவர், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த சந்தேக நபர் காலி முகத்திடல் பகுதியில் மறைந்திருந்த நிலையில் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் சுமார் இரண்டு மாதங்களாக போராட்ட களத்தில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
