Our Feeds


Monday, July 4, 2022

ShortNews

அந்தமானில் அடுத்தடுத்து 7 தடவைகள் தொடர் நிலநடுக்கம்



அந்தமானில் இன்று காலை முதல் 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை 11:05:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அது ரிச்டரில் 4.4 ஆகப் பதிவானது.

அடுத்ததாக பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 ஆகவும், 2.06 மணிக்கு 4.6 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து 2.37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ஆகவும் அடுத்து 3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது.

3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 256 கிமீ தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பிற்பகல் 3.25 மணிக்கு போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 205 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் 4.6 என்ற அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

7 ஆவது முறையாக பிற்பகல் 3.39 மணிக்கு நிலநடுக்கமானது ரிச்டரில் 3.8 ஆகப் பதிவானது.

அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »